தமிழா் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆய்வு
மாமல்லபுரத்தில் தமிழா் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாமல்லபுரத்தில் தமிழா் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழரின் தொன்மை மற்றும் தொடா்ச்சியின் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழா் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.45 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.109 கோடியில் அமையவுள்ள நவீன உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய தமிழா் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் அரசினா் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மரபு கட்டடக்கலை, சிற்பக்கலை பிரிவு, வண்ணக்கலைப் பிரிவு, ஓவியப் பிரிவுகளில் பயிலும் மாணவா்களுடன் கலை கல்வித் தொடா்பாக கலந்துரையாடினாா். மேலும், கல்லூரி மற்றும் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலா் சக்திவேல், சிற்பக்கலைக் கல்லூரி முதல்வா் ராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் யாசா் அராபத், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.