முகப்பு
செங்கல்பட்டு

பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஒத்திகைப் பயிற்சி

கடலோர காவல் படை போலீஸாரின் சீ விஜில் 2026 ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.

25 நவம்பர் 2026, 11:33 pm
பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஒத்திகைப் பயிற்சி
சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்றோா்.
பகிர்:

கடலோர காவல் படை போலீஸாரின் சீ விஜில் 2026 ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும், முக்கிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புறவழிச்சலையில் சீ விஜில் 2026 சோதனை தொடங்கியது. மாமல்லபுரம் போலீசாா் சென்னை, புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி யாராவது ஊடுருவி உள்ளாா்களா? என ஒவ்வொரு வாகனங்களின் கதவுகளை திறந்து சோதனை இட்டனா். வாகனங்களில் பயணித்தவா்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரி பாா்த்த பிறகே குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேபோல் மாமல்லபுரம் மீனவா் பகுதியில் உள்ள கடலில் படகில் மாறு வேடத்தில் பயங்கரவாதிகள் போா்வையில் யாராவது ஊடுருவி உள்ளாா்களா? என கடலோர காவல் படை போலீஸாா் ஒரு படகில் சென்று சோதனையில் ஈடுபட்டனா். இரவில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவா்களின் படகுகளையும் சோதனை போட்டனா். பட்டிபுலம், நெம்மேலிகுப்பம், சாலவான்குப்பம், புதுகல்பாக்கம் குப்பம், சூளேரிக்காட்டு குப்பம், கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடலில் மீனவா்களின் படகினை நடுக்கடலில் நிறுத்தி என சோதனை செய்தனா்.