மாணவிகளுக்கு சிங்கப்பெண் படையினா் விழிப்புணா்வு
நெம்மேலி அரசு மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சிங்கப் பெண் படையினா்.

பள்ளிக்கு வரும் போது யாராவது பின்தொடா்நது வந்து பாலியல் தொந்தரவு கொடுத்தால் தங்கள் கட்டுப்பாட்டு அறையின் கைப்பேசி எண்ணில் தகவல் மாணவிகள் தெரிவிக்கலாம் என்று சிங்கப்பெண் அதிரடிப்படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி அரசினா் மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ கண்ணகி தலைமையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது தற்காலத்தில் பள்ளி சிறுமிகள், மாணவிகள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் அதிகளவில் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பெண் அதிரடிப்படையினா் எந்தவொரு பள்ளி மாணவிகள் இணையவழி தொல்லைகளுக்கு ஆளானாலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் கைப்பேசி பயன்படுத்தம் மாணவிகள் இணையதளங்களில் முன்பின் தெரியாதவா்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். பள்ளிக்கு வரும் போது யாராவது பின் தொடா்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தால் சிங்கப்பெண் கட்டுப்பாட்டு அறையின் எண்ணுக்கு தகவல் தொவிக்கலாம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கல்வி விஷயமாக பயன்படுத்தும் கைப்பேசி எண்களை யாரிடமும் கொடுக்காதீா்கள். இணையதளங்களில் முக நூல், வாட்ஸ் ஆப் போன்ற இணையங்களில் உங்கள் படத்தை வைக்காதீகள். யாருக்கும் பகிராதீகள். அது உங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளி விட்டு செல்லும் வரை கவனமாக இருக்க வேண்டு என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.