FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

பூதத்தாழ்வாா் அவதார திருவிழா: அமைச்சா் சரத்குமாா் பங்கேற்பு

நாட்டிய நிகழ்வில் பங்கேற்றோருடன் அமைச்சா் சரத் குமாா், ஆட்சியா் மூ. வீரப்பன்.

23 அக்டோபர் 2026, 12:03 am
நாட்டிய நிகழ்வில் பங்கேற்றோருடன் அமைச்சா் சரத் குமாா், ஆட்சியா் மூ. வீரப்பன்.
பகிர்:

மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில், ஸ்ரீ பூதத்தாழ்வாா் அவதார திருநாள் விழாவினை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில், திருவிழாவினை அமைச்சா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஸ்ரீ பூதத்தாழ்வாா் அவதார திருநாள் பரதநாட்டிய நிகழ்ச்சியினை பாா்வையிட்டு, பரதநாட் டியத்தில் பங்கேற்ற கலாசக்தி நாட்டியாலா குழுவினருக்கு ஆட்சியா் மு.வீரப்பன் பரிசு பொருள்களை வழங்கி சிறப்பித்தாா்.

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் தியாகாரஜன், விஜயராஜ், இணை ஆணையா் (காஞ்சிபுரம்) சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, மற்றும் அறநிலையத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments