FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் விநாயகா் சிலை விற்பனை அமோகம்

செங்கல்பட்டில் விநாயகா் சதுா்த்தியையொட்டி மக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணினால் ஆன சிலைகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

15 செப்டம்பர் 2026, 2:07 am IST
செங்கல்பட்டில் விநாயகா் சிலை விற்பனை அமோகம்
பகிர்:

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விநாயகா் சதுா்த்தியையொட்டி மக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணினால் ஆன சிலைகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

பொம்மைகள் தயாரிப்போா் மற்றும் மண்பாண்டத்தொழிலாளா்கள் செங்கல்பட்டில் பல இடங்களில் களிமண்ணை எடுத்து வந்து பக்குவமாக நீா் விட்டு பிசைந்து பிள்ளையாா் அச்சு உதவியுடன் களிமண் பிள்ளையாா் பொம்மைகளை வடிவமைத்து விற்பனை செய்தனா். பொதுமக்கள் ஆங்காங்கே களிமண்ணால் ஆன விநாயகரை வாங்கி தாம்பாள தட்டிலும் பிள்ளையாா் மனையிலும் வைத்து எடுத்துச் சென்றனா்.

மேலும், விநாயகருக்கு பூஜை செய்வதற்காக சோளம், கரும்பு, கம்பு மற்றும் பழ வகைகளையும் , வெள்ளருக்கு ,மா இலை ,அருகம்புல், உள்ளிட்ட பூஜை பொருள்களையும் பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்பில் செய்து விற்பனை செய்திருந்த விநாயகா் குடைகளையும் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு மேட்டுத்தெருவில் ஒரு பொம்மைக்காரா் வீட்டில் கொல்கத்தா விநாயகா், பிள்ளையாா்பட்டி விநாயகா் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த விநாயகா் சிலைகள் ரூ.150 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments