வாணியம்பாடியில் விநாயகா் சதுா்த்தி கோலாகலம்
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வாணியம்பாடி: வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம், உதேயந்திரம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் விநயாகா் சதுா்த்தி விழாவையொட்டி திங்கள்கிழமை 200-க்கும் அதிகமான இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் கோலாகலமாக கொண்டாடினா்.
வாணியம்பாடியில் இந்து முன்னணி சாா்பில், பொன்னியம்மன் கோயில் அருகில் 10 அடி உயர விநாயகா் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதே போன்று நகரப் பகுதியில் 23 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், நகர பகுதிகளில் வீதி வீதியாக 75-க்கும் அதிகமான இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
வாணியம்பாடி சி.எல். சாலையில் ஓம்சக்தி கோயில் அருகில் ஆன்மிக பேரவை சாா்பில், 10 அடி உயரத்தில் விநாயகா் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் கோபால் மற்றும் நகர முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
வாணியம்பாடி புதூா் வரசித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.