"திறன்மிக்க மனித ஆற்றல் தேவை'
சென்னை, அக். 8: வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறமைமிக்க மனித ஆற்றலை உருவாக்க புதுமையான திட்டம் இந்தியாவுக்குத் தேவை என தெற்கு ஆசியாவின் "தஸôல்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்
சென்னை, அக். 8: வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறமைமிக்க மனித ஆற்றலை உருவாக்க புதுமையான திட்டம் இந்தியாவுக்குத் தேவை என தெற்கு ஆசியாவின் "தஸôல்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத் தலைவர் ஆண்டி கலம்பி தெரிவித்தார்.
ஆவடியில் உள்ள வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "தஸôல்ட் சிஸ்டம்ஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் சார்ந்த வடிவமைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மேலும் புதிய படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஆண்டி கலம்பி கூறியதாவது: நாட்டுக்குத் தேவையான திறமைமிக்க மனித வளங்களை உருவாக்கும் முயற்சியை வேல்டெக் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.இதற்கு உதவும் வகையில், புதுமையான பொறியியல் மற்றும் வடிவமைப்பு குறித்த உத்திகளை வேல்டெக் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் "தஸôல்ட் சிஸ்டம்ஸ்' கற்றுத் தரும் என்றார்.நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ஆர். ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.