FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உயர் நீதிமன்றத்தில் போராட்டம்: 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிûளையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் பகத்சிங், அய்யப்பன் உள்ளிட்ட 11 பேர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌலின் அறைக்கு அத்துமீறி சென்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் என்.கலையரசன் எஸ்பிளனேடு காவல் நிலைத்தில் புகார் தெரிவித்தார்.
 இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பகத்சிங், முருகன், ஏழிலரசு, செந்தரமிழன், செல்வகுமார், சிவசந்திரன், அன்பழகன், ஆனந்தபாண்டி, தியேந்திரன், பாரதி, பொற்கொடி ஆகியோரைக் கைது செய்தனர்.
 இதில், கைது செய்யப்பட்ட பகத்சிங், பாரதி தம்பதியின் 3 வயது மகன் அம்பேத்கரையும் போலீஸார் அழைத்து சென்றனர்.
 வழக்குரைஞர்களின் இந்தத் திடீர் போராட்டத்தில் உயர் நீதிமன்ற வளாகத்திலும், வழக்குரைஞர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments