FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக மாறுவதை தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! உதயநிதி

கோவை பள்ளியில் சாதி பாகுபாட்டினால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு...

தமிழக முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

கோவை பள்ளியில் சாதி பாகுபாட்டினால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

Advertisement

Advertisement

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச்சூழலில், திமுக - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கோவையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் ஆசிரியா் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமை ஆசிரியா் உள்பட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

summary

Udhayanidhi Stalin posts about incident student suicide due to caste discrimination in a Coimbatore school

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments