முகப்பு

திமுக எப்போதும் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை மெரினாவில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி...

59 வினாடிகள் முன்பு
திமுக எப்போதும் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்: உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்.
பகிர்:

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சென்னை மெரினாவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "தேசியத் தலைவர்கள் கார்கே உள்ளிட்டோர் சென்னை வருவது பற்றி எனக்குத் தெரியாது. தலைவரைப் பார்க்கலாம் அல்லது ஒருவேளை புதிய நண்பரைப் பார்க்க வரலாம். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை. அவர் வீட்டை விட்டு வெளியே வருவாரா எனத் தெரியவில்லை.

நாட்டிலேயே தொகுதி மறுவரையறை குறித்து முதன்முதலில் பேசியது மு.க. ஸ்டாலின்தான். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை எரித்தவரும் எங்கள் தலைவர்தான். தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தோல்வியடைய வைத்ததும் திமுகதான்.

Advertisement

Advertisement

தற்போது இந்த மசோதாவில் நாங்கள் சொன்ன மாற்றங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடத்தி ஒரு முடிவை எடுத்துள்ளனர். தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதை நாங்கள் செய்வோம். இந்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவு பற்றிப் பேச விரும்பவில்லை.

திமுக எப்போதும் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்; அதற்காகப் போராடுவோம். மாநில உரிமையை எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். சோனியா காந்தி மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர்களின் தமிழ்நாட்டு வருகையை வரவேற்கிறேன்" என்றார்.

summary

Opposition leader Udhayanidhi Stalin has offered an explanation regarding the DMK's support for the delimitation bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.