பாரம்பரியக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்களை பாதுகாக்க மாற்று ஏற்பாடு: சிஎம்டிஏ
சென்னையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க, கட்டட உரிமையாளர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க
சென்னையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க, கட்டட உரிமையாளர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க சிஎம்டிஏ நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பராமரிக்க இயலாத சூழ்நிலையும், வேறு இடங்களிலும் உரிமையாளர்கள் வசித்தும் வருகின்றனர். இதனால் பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க முடிவதில்லை.
மேலும், பல்வேறு பாரம்பரிய கட்டடங்களில் அரசு அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதேபோல், முறையாகப் பராமரித்தால் பாரம்பரிய, வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கைகளை வைத்தனர்.
எனவே, பாரம்பரிய கட்டடங்களை முறையாகப் பயன்படுத்தவும், பராமரிக்கவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ வட்டாரங்கள் கூறியது:
சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில், உரிமையாளர்கள் வசித்து வருவதோடு, பாரம்பரிய கட்டடங்களைப் பராமரிக்க போதிய பொருளாதார வசதிகள் இல்லை. மேலும், வேறு சில உரிமையாளர்கள் வேறு இடங்களில் வசிப்பதால் முறையாகப் பராமரிக்கவும் முடிவதில்லை.
இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும இரண்டாம் முழுமைத் திட்டத்தின் படி, பாரம்பரிய கட்டட உரிமையாளர்களுக்கு மாற்று வளர்ச்சி உரிமை (டிடிஆர்) விதிகள், தர பரப்பு குறியீட்டு ஆகியவற்றின் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இதன் மூலம், நில உரிமையாளர்கள் மாற்று இடத்தில் குடியேறுவதுடன், பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.