FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாயத்தில் இளைஞர்களை தக்கவைக்க நிரந்தர வருவாய் அவசியமானது: எம்.எஸ்.சுவாமிநாதன்

விவசாயத்தில் இளைஞர்களைத் தக்கவைக்க வேளாண் தொழில்நுட்பம் மூலம் நிரந்தர வருவாயை ஏற்படுத்துதல்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

விவசாயத்தில் இளைஞர்களைத் தக்கவைக்க வேளாண் தொழில்நுட்பம் மூலம் நிரந்தர வருவாயை ஏற்படுத்துதல் அவசியம் என, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
 சென்னையில் வேளாண் தொழில்நுட்பத்தை துல்லியமாகப் பயன்படுத்துவதற்கான "அக்ரிகான்' மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அமைப்புத் தலைவர் எஸ்.எஸ்.சுவாமிநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பு - விவசாய உணவு பதப்படுத்துதல் பணிப் பிரிவுத் தலைவர் ஸ்ரீராம் சுப்ரமண்யா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் கே.வி.ராவ் உள்ளிட்டோர் தொடக்கிவைத்தனர்.
 இதில், வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
 இதுகுறித்து ஸ்ரீராம் சுப்பிரமண்யா கூறியதாவது:
 வேளாண் தொழில்நுட்பத்தை தேவைக்கேற்ப துல்லியமாக பயன்படுத்த விவசாயிகளிடையே நேரிடை பகிர்தல் முறையை கொண்டு வரவேண்டும். மேலும், காப்பீடு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன், இயற்கை முறை விவசாயம், நீர்த் தேவை ஆகியவற்றில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
 இதனால், பல்லுயிர் தன்மை கொண்ட உற்பத்தி மூலம் பாரம்பரிய விதைகள் பாதுகாக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் அதிகரிக்கச் செய்யலாம். அதேபோல, வேளாண் பெரு நிறுவனங்கள் உற்பத்தி, தரத்தை மேம்படுத்த விவசாயிகளோடு ஒன்றிணைதல் அவசியமானது என்றார்.
 வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
 பேசியதாவது: விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். இதற்காக, வேளாண் பெரு நிறுவனங்கள் விவசாயிகளை நேரடியாக சந்திக்க வேண்டும்.
 உலகரங்கில் வேளாண் உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. இருப்பினும், 10 டன் தானிய வகைகளை இறக்குமதி செய்கிறோம். ஆகவே, நில, நீர் வளத்தை அதிகரிக்கச் செய்து, தரமான உற்பத்தியை இருமடங்கு உயர்த்த வேண்டும். உயிர்ம வேளாண் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பங்கள், சூழலியல் தொழில்நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும்.
 எனவே, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி, வருவாயை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி, தொழில்நுட்பத்தோடு வளர்ச்சி காணும் என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments