சென்னை வந்த விமானத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்
பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பக்ரைனில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சுங்கத் துறை எல்லையைத் தாண்டி வேகமாகக் கடந்து சென்ற பயணியை அதிகாரிகள் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனையிட்டதில், ஒரு அட்டை பெட்டி இருந்தது. அதனுள் அலுமினியம் ஷீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். இதைக் கடத்தி வந்த பயணியான சென்னையைச் சேர்ந்த ஹைடுரூஸிடம் (34) அதிகாரிகளின் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.