FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தெற்கு ரயில்வே ஒப்பந்தப் பணி விவகாரம்: சமரசத் தீர்வு காண மூத்த வழக்குரைஞர் நியமனம்

தெற்கு ரயில்வேக்கும், தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தப் பணி விவகாரம் குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மூத்த வழக்குரைஞர் 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


தெற்கு ரயில்வேக்கும், தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தப் பணி விவகாரம் குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மூத்த வழக்குரைஞர் கே. கபீரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி இடையே ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தில், சில ஒப்பந்தப் பணிகளை கடந்த 2009 -ஆம் ஆண்டு எடுத்திருந்தோம். இந்தப் பணிகளை 15 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகளை முடிக்க 36 மாதங்கள் ஆகிவிட்டதால், இதற்கான தொகையை எங்கள் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளது. இதனால் எங்கள் நிறுவனத்துக்கும், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு சமரசத் தீர்வாளரை நியமிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தது.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரு தரப்புக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண மூத்த வழக்குரைஞர் கே.கபீரை நியமித்து உத்தரவிட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்ற சமரசத் தீர்வு விதிகளின் அடிப்படையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments