மெரீனாவில் கரை ஒதுங்கிய சடலம்
சென்னை மெரீனா கடலில் குளித்தபோது, இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் சடலம் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.
சென்னை மெரீனா கடலில் குளித்தபோது, இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் சடலம் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (21). இவரது உறவினர், கமலேஷ் குமார் (19). இருவரும், சென்னை மின்ட் பகுதியில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை செய்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் மெரீனாவில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி இருவரும் மாயமாகினர். இந்நிலையில், எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்பகுதியில் திங்கள்கிழமை காலை நரேஷ்குமாரின் சடலம் கரை ஒதுங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.