FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் 19-இல் குரூப் 2 தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கம் வரும்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து அதன் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1,199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுடன் கூடிய குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 10-ஆம் தேதி வெளியானது. முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 11-இல் நடைபெறவுள்ளது. இத்தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பிரவீண் ஐ.எஃப்.எஸ். , துணை ஆட்சியர் வி.பி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கவுள்ளனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் செல்லிடப்பேசி எண்.94442 27273-க்கு தங்கள் பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு டபுள்யு 4, 5-ஆவது மெயின் சாலை, அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments