தலைமைச் செயலக ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடும் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் ஊழியர்களின் ஒருநாள் ஊதியமானது, கேரள அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.