இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
புதிதாகத் தொடங்கப்பட்ட இ20 மக்கள் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவது குறித்து...
புதிதாகத் தொடங்கப்பட்ட இ20 மக்கள் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை இன்று (ஜூலை 27) 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பில்லாத எரிபொருள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களில், மக்களுக்கு இ20 கலக்கப்படாத பெட்ரோல் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரியும், இந்த இ20 மக்கள் கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை இன்று இரவு 7 மணி நேர நிலவரப்படி, மூன்று லட்சத்துக்கும் மேலானோர் பின் தொடர்ந்துள்ளனர். மேலும் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
The number of followers on the newly launched Instagram account of the E20 Makkal Katchi crossed 300,000 today (July 27).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.