FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘நெஞ்சம் நிறைந்த நன்றி’... முதல்வர் விஜய்யைப் பாராட்டிய சீமான்!

முதல்வர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் - சீமான்.
பகிர்:

முதல்வர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா, கடந்த ஜூன் 10 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேனியில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகைப் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து கிராமச் சூழலுக்கு நகர்த்தி மக்களின் வாழ்வியலை திரைப்படங்களாக உருவாக்கியவரும், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவருமான பாரதிராஜாவுக்கு அவரது சாதனைகளைப் போற்றும் வகையில் ரூ. 2.50 கோடியில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (ஆக. 24) சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Advertisement

Advertisement

தமிழக அரசு சார்பில் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, has thanked Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments