108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு: நள்ளிரவு வரை நீடித்த சமாதான பேச்சுவார்த்தை
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது.
இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை, பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தின் முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் மே 2 -ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஜூன் 8 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.
இந்த நிலையில், 108 சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.