இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் விலகல்?
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரியான் டென் டொஸ்சாட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரியான் டென் டொஸ்சாட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி அண்மையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரியான் டென் டொஸ்சாட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த பிறகு இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பிசிசிஐ-டம் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துவிட்டார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் அவர் மீண்டும் இணையவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு வீரராக விளையாடி வந்த ரியான் டென் டொஸ்சாட், பின்னர் அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இணைந்தார். கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு வீரராக அவர் அங்கம் வகித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக அவர் இணைந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்ற ரியான் டென் டொஸ்சாட், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that Ryan ten Doeschate is stepping down from his role as an assistant coach of the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.