விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புகழாரம்!
இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது அவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இளம் வீரர்கள் பலருக்கும் ஊக்கமளிப்பவராக விராட் கோலி இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஃபீல்டிங்கில் விராட் கோலியின் ஆர்வத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. பவர் பிளேவில் அவர் எப்படி ஒரு பேட்டராக சிறப்பாக செயல்படுகிறாரோ, அதேபோல ஃபீல்டிங்கில் டைவ் அடித்து கேட்ச்சுகளை அற்புதமாக பிடிப்பார். கடந்த தொடரிலும் அவர் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். இந்த வயதிலும் அவர் மிகவும் வேகமாக ஓடி பந்துகளை தடுக்கிறார். பந்துகள் அவரிடம் நெருங்குவதற்கு முன்பே வேகமாக ஓடி சிறப்பாக தடுப்பார் என்றார்.
இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டர்களில் விராட் கோலியும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 336 கேட்ச்சுகளுக்கும் அதிகமாக பிடித்துள்ளார். முன்னதாக, இந்த வரிசையில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் இருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகள் பிடித்த முன்னாள் வீரர் முகமது அசாரூதினின் சாதனையையும் விராட் கோலி விட்டுவைக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 156 கேட்ச்சுகளுக்கும் அதிகமாக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Indian team's former fielding coach has heaped praise on senior player Virat Kohli.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.