FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாகிஸ்தான் அணிக்கு தொடரும் பின்னடைவு... பந்துவீச்சுப் பயிற்சியாளரும் ராஜிநாமா!

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷ்லி நோஃப்கே தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதைப் பற்றி...

24 செப்டம்பர் 2026, 2:20 pm IST
ஆஷ்லி நோஃப்கே
பகிர்:

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷ்லி நோஃப்கே தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி மூன்று போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்து தொடரையும் 0-3 என்ற கணக்கில் இழந்தது.

முதலிரண்டு போட்டிகள் ஏற்பட்ட தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் டெஸ்ட் பயிற்சியாளர்கள் சர்ஃபாஸ் அகமத், உமர் குல் ஆகியோரை கடந்த செப். 1 ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.

Advertisement

Advertisement

நட்சத்திர வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகிய 5 வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதேவேளை, போட்டிகளில் விளையாடாமலேயே ஆமிர் ஜமால் மற்றும் முகமது ஜாஃபர் உள்ளிட்டோரும் நாடு திரும்பினர்.

அதன்பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவிலிருந்து மிஸ்பா உல் ஹக் ராஜிநாமா செய்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ந்து சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி நோஃப்கே பதவி விலகி நெதர்லாந்து அணியில் இணையவுள்ளார். ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியுடன் பாகிஸ்தான் அணியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள ஆஷ்லி நோஃப்கே, நெதர்லாந்து அணியுடன் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பாகிஸ்தான் அணியுடன் ஒப்பந்தம் இருக்கும் நிலையில், இந்தத் திடீர் முடிவை நோஃப்கே எடுத்துள்ளார்.

ஜூலை 2026-ல், பயிற்சியாளர் ஷேன் மெக்டெர்மாட்டும் அதற்கு சில மாதங்கள் முன்னதாக பேட்டிங் பயிற்சியாளர் ஹனிஃப் மாலிக் ஆகியோரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய ஒருநாள் உலகக் கோப்பையில், நெதர்லாந்து அணி வலிமைமிக்க தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது.

ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி தனது இடத்தை உறுதி செய்துள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இடம்பெறும் முனைப்பில் இருக்கிறது.

நோஃப்கே பதவி விலகல் பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் வருகை நெதர்லாந்து அணிக்கு வலிமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Weeks after Ashley Noffke was asked to join the red-ball staff in London for 3rd Test vs England, the bowling coach has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments