நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. வீரர் நியமனம்!
நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைமைப் பயிற்சியாளர் குறித்து...
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்லி நோஃப்கே (49 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவிக்காக ஆஷ்லி நோஃப்கே தனது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் அணியில் விளையாடிய ஆஷ்லி நோஃப்கே தேசிய அணியில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால், உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தியாவின் மகளிர் டி20 லீக் உள்பட பல்வேறு டி20 லீக்குகளில் பயிற்சியாளராக பணிபுருந்த ஆஷ்லி நோஃப்கே தற்போது நெதர்லாந்து அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக முன்னேறியுள்ளார்.
நெதர்லாந்து அணியை அடுத்த வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை, 2028 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்ய வேண்டும் என ஆஷ்லி நோஃப்கேவிற்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவர் ஆர்சிபி அணியிலும் விளையாடியுள்ளார். நெதர்லாந்து அணி கடந்த ஆறு முறையும் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. 2011 முதல் ஒருநாள் உலகக் கோப்பையில் ஒருமுறை மட்டுமே தேர்வாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
Noffke leaves role with Pakistans cricket team to take over as Netherlands coach
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.