FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்தா வாஸ் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம் குறித்து...

44 வினாடிகள் முன்பு
சமிந்தா வாஸ் - படங்கள்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ்
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் ஓர் அணியாக அங்கம் வகிக்கிறது. இந்த அணிக்கு சமீபத்தில் கங்குலி தலைமைப் பயிற்சியாளராக பதவி ஏற்றார்.

துணை மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வேகப் பந்து பயிற்சியாளராக சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இலங்கை அணிக்கு சமிந்தா வாஸ் 111 டெஸ்ட்டில் 355 விக்கெடுகளும் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சிறப்பாக பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

முன்னதாக 2 சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்கு முனாஃப் படேல் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இன்னும் ஒருமுறைக்கூட தில்லி அணி ஐபிஎல் கோப்பை வென்றதில்லை என்பதால் இந்தமுறை பயிற்சியாளர்களை மாற்றி வருகிறது.

கடந்த 2020 சீசனில் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தில்லி அணி, கடந்த 2 சீசன்களாக பிளே ஆஃப் செல்லாததும் குறிப்பிடத்தக்கது.

தில்லி கேபிடல்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில், “உலகக் கோப்பை வெற்றியாளர், இலங்கையின் சிறந்த வீரர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

சமிந்தா வாஸ் ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2008-10 வரை முதல் மூன்று சீசன்களில் விளையாடி இருக்கிறார்கள். தற்போது, பயிற்சியாளராகத் திரும்பியுள்ளார்.

summary

Delhi Capitals rope in Chaminda Vaas as fast-bowling coach

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments