முகப்பு

தில்லி கேபிடல்ஸ் அணியில் புதிய பொறுப்பில் மஹேலா ஜெயவர்த்தனே!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

52 வினாடிகள் முன்பு
தில்லி கேபிடல்ஸ் அணியில் புதிய பொறுப்பில் மஹேலா ஜெயவர்த்தனே!
- படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மஹேலா ஜெயவர்த்தனே அண்மையில் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தில்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாக முடிவுகள், சிறந்த திறமையான வீராங்கனைகளை கண்டுபிடித்தல், பயிற்சியாளர்கள் குழுவை கட்டமைப்பது போன்ற அனைத்தையும் ஜெயவர்த்தனே கவனித்துக்கொள்ள உள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஜெயவர்த்தனே பேசியதாவது: தில்லி கேபிடல்ஸ் அணியிடம் வலுவான அடையாளம் மற்றும் எதிர்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வை உள்ளது. தில்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தில்லி அணி கோப்பையை வெல்ல என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன் என்றார்.

ஐபிஎல் தொடரில் ஜெயவர்த்தனே தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Mahela Jayawardene has been appointed as the Director of Cricket for the Delhi Capitals team in the Women's Premier League.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.