FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது!

தில்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது செய்யப்பட்டது பற்றி...

46 வினாடிகள் முன்பு
தில்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது - x | cisf
பகிர்:

தில்லி விமான நிலையத்துக்குள் உரிய ஆவணங்களின்றி அத்துமீறி நுழைந்தவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த நுழைவு வாயில் 3-ல் முறையான ஆவணங்களின்றி புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஒருவர் நுழைந்துள்ளார்.

Advertisement

Advertisement

மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் சோதனையின் போது அத்துமீறி புறப்பாடு வாயிலுக்குள் நுழைந்தவரை அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், தில்லி காவல்துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த நபர் ஹரியாணா மாநிலம், சோனிபட்டைச் சேர்ந்த குணார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முறையான நுழைவு இசைவு (விசா) அல்லது பயண ஆவணங்கள் ஏதுமின்றி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நோக்கில், முறையான விசா அல்லது பயணத்திற்குத் தேவையான ஆவணங்கள் ஏதுமின்றி அவர் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அந்த நபரின் தந்தை கூறுகையில், குணால் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

summary

Person who trespassed into Delhi airport arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.