FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி விமான நிலைய மூன்றாவது ஓடுபாதை இன்று மீண்டும் திறப்பு!

தில்லி விமான நிலைய மூன்றாவது ஓடுபாதை இன்று மீண்டும் திறக்கப்படுவது பற்றி...

19 செப்டம்பர் 2026, 9:56 pm IST
தில்லி விமான நிலையம் - Photo | Delhi Airport
பகிர்:

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்காக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த மூன்றாவது ஓடுபாதை ஞாயிற்றுக்கிழமை (செப். 20) முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இது குறித்து தில்லி விமான நிலைய பணிகளை கவனிக்க ஒப்பந்தம் பெற்றுள்ள ஜிஎம்ஆா் குழுமத்துடன் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) இணைந்து அமைத்துள்ள கூட்டு நிறுவனமான தில்லி சா்வதேச விமான நிறுவனம் (டிஐஏஎல்) சனிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது:

’ரன்வே 11ஆா்/29எல்’ என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த மூன்றாவது ஓடுபாதையின் விரிவான சீரமைப்புப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதற்கான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பாதை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

Advertisement

Advertisement

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இந்த மூன்றாவது ஓடுபாதை 2008-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 17 ஆண்டுகளாக தொடா் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ஓடுபாதையில் 2017-இல் சிறிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மூன்றாவது ஓடுபாதையில் விரிவான சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. சுமாா் 7 மாத கால பணிகளுக்குப் பிறகு, அனைத்து ஆய்வுகள் மற்றும் அனுமதி பெறப்பட்டுள்ளதால் இந்த ஓடுபாதை மீண்டும் பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.

இந்தச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ஓடுபாதையின் மேற்பரப்பை மறுசீரமைத்தல், ’ரன்வே 29எல்’-இன் எல்லையை நிரந்தரமாக இடமாற்றம் செய்தல், விமானங்கள் விரைவாக வெளியேறுவதற்கான புதிய வழி, தரைத்தள விளக்கு அமைப்புகளை மேம்படுத்துதல், ஓடுபாதையை வலுப்படுத்துதல் மற்றும் சிவில், மின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று டிஐஏஎல் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான தில்லி விமான நிலையத்தில் நான்கு ஓடுபாதைகள் உள்ளன. அவற்றின் மூலம் தினமும் 1,300-க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து (வருகை மற்றும் புறப்பாடு) கையாளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமாா் 10.6 கோடி பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது.

summary

Delhi Airport's third runway reopens today

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments