புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!
புதிய விமான நிலைய இடம் குறித்து தமிழக அரசு பரிசீலனை.
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் 2-வது விமான நிலைய இடம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வந்தன.
இந்த திட்டத்துக்காக பரந்தூர், ஏகனாபுரம், குணககரம்பாக்கம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு தொடங்கப்பட்டு அதன் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அமைப்புகளின் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதன்முதலாக ஏகனாபுரம் வருகை தந்த அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தவெக ஆட்சிக்கு வந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு, மாற்று இடம் தோ்வு செய்யப்படும் என பேசினார்.
இதனிடையே, விவசாயிகள், பொதுமக்களின் நலனைக் காப்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக அண்மையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
அதற்கு மாற்றாக, வேறு இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்யூர், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மாநெல்லூர் என 2 இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மாற்று இடத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆய்வு செய்ய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reports indicate that the Tamil Nadu government is considering a location for Chennai's second airport, with the Parandur airport project having been abandoned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.