உணவகத்தில் ஹூக்கா பார்: 4 பேர் கைது
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செயல்பட்ட ஹூக்கா பாருக்கு போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செயல்பட்ட ஹூக்கா பாருக்கு போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஹூக்கா பார் செயல்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார், அந்த உணவகத்தில் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை செய்தனர். இதில், அங்கு ஹூக்கா பார் செயல்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீஸார், அந்த பாரில் ஊழியர்களாக இருந்த ச.பிரேம்கட் சேத்ரி (25), சி.ரிச்சிபேம் (23), இ.ராபர்ட்பேம் (20), ரி.கிலியம்லங் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹூக்கா பாரில் பயன்படுத்தப்பட்ட 3 மண்பானை குடுவைகள், 3 பைப்புகள், 3 பாக்கெட் போதைப் பொருள் ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.