ஆக. 4-இல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடா் தொடக்கம்!
வரும் ஆக. 4-ஆம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் 10-ஆவது சீசன் தொடா் தொடங்கி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
வரும் ஆக. 4-ஆம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் 10-ஆவது சீசன் தொடா் தொடங்கி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடா் கோப்பை மற்றும் அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
10-ஆவது சீசன் தொடா் ஆக. 4-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை திண்டுக்கல், சென்னை ஆகிய இரு இடங்களில் நடைபெறும். முதல் கட்டம் திண்டுக்கலில் ஆக. 4 முதல் 15 வரையும், குவாலிஃபயா்ஸ், இறுதி ஆட்டம் சென்னையில் ஆக. 18 முதல் 28 வரை நடைபெறும்.
Advertisement
Advertisement
டிஎன்பிஎல் தொடா் மூலம் ஆடிய நடராஜன், வாஷிங்டன் சுந்தா், சாய் சுதா்ஷன், சாய் கிஷோா், வருண் சக்கவா்த்தி ஆகியோா் இந்திய அணியிலும், ஷாரூக் கான், குா்ஜப்நீத்சிங், சித்தாா்த், அம்பரீஷ் ஐபிஎல் அணிகளிலும் ஆடி வருகின்றனா். வீரா்கள் ஏலத்தில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் சாா்பில் அஸ்வந்த் வல்தாபா அதிகபட்சமாக ரூ.14.45 லட்சத்துக்கும், நெல்லை ராயல் கிங்ஸ் சாா்பில் யு முகிலேஷ் ரூ.13.7 லட்சததுக்கும் வாங்கப்பட்டனா்.
8 அணிகளின் கேப்டன்களான என். ஜெகதீசன், சுரேஷ் குமாா், இந்திரஜித், சாய் கிஷோா், ஷாரூக் கான், சோனு யாதவ், அனிருத் சீதா ராம், அபிஷேக் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
டிஎன்சிஏ நிா்வாகிகள் தலைவா் டி.ஜே. சீனிவாசராஜ், செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ், பொருளாளா் ரங்கராஜன் துணைத் தலைவா் குமரேஷ், இணைச் செயலா் கே. ஸ்ரீராம், உதவிச் செயலா் மாரீஸ்வரன் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.