தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 4,000 கோடி பங்களித்த எஸ்ஏ20 சீசன் 4!
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் எஸ்ஏ20 சீசன் 4 கிரிக்கெட் தொடர் அளித்த பங்களிப்பு குறித்து...
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் எஸ்ஏ20 சீசன் 4 கிரிக்கெட் தொடர் சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டி மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.
உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் மிகவும் புகழ்பெற்று வருகின்றன. அதேபோல தென்னாப்பிரிக்காவில் கடந்த 2023 முதல் டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போட்டிகளை கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா (சிஎஸ்ஏ) நடத்தி வருகின்றன. 2023, 2024, 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியே கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2025 சீசனில் மட்டும் எம்ஐ கேப் டௌவுன் என்ற அணி வென்றது.
Advertisement
Advertisement
இதில் கடைசி சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. இந்த சீசனில் தென்னாப்பிரிக்க நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 406 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 3, 874.53 கோடி) வருவாய் ஈட்ட உதவியுள்ளது.
இந்த சீசனில் மூலம் அங்கு 9,470 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. சீசன் 3ல் 112 மில்லியன் டாலரில் இருந்து 137 மில்லியனுக்கு உயர்ந்தது. ஆனால், இந்த சீசனில் 406 மில்லியனாக உயர்ந்துள்ளது மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த சீசனில் 23 சதவிகித வளர்ச்சி கண்ட எஸ்ஏ20 இந்த சீசனில் மட்டுமே 66.26 சதவிகிதம் வளர்ச்சியை அளித்து அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக போட்டியை நடந்தும் சிஎஸ்ஏ20 நிர்வாகம் தெரிவித்துள்ளது,
சிஎஸ்ஏ20 தொடரை முன்னாள் வீரர் கிரீம் ஸ்மித் ஆணையராக இருந்து நடத்தி வருகிறார். ஐந்தாவது சீசன் வரும் 2027 ஜனவரி 17ல் தொடங்கவிருக்கிறது.
SA20 Season 4 delivered USD 406 million boost to South African economy: Organisers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.