FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதல் சீசன் வெற்றி: காதல் கடிதமாக உருவாகும் முசாஃபிர் கஃபே 2!

முசாஃபிர் கஃபே இணையத் தொடரின் சீசன் 2 அப்டேட் குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:36 pm IST
முசாஃபிர் கஃபே போஸ்டர். - படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ் இந்தியா.
பகிர்:

நடிகர் விக்ராந்த் மாஸே நாயகனாக நடித்துள்ள 'முசாஃபிர் கஃபே' இணையத் தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் லூடேரா படத்தின் மூலம் 2013-ல் நடிகராக அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. கின்னி வெட்ஸ் சன்னி, தில் ரூபா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான ‘12த் ஃபெயில்’ திரைப்படம் மூலம் இந்தியளவில் சிறந்த நடிகராக கவனம் பெற்றார். அந்தப் படம் தேசிய விருது பெற்றதும் கவனிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

இயக்குநர் ருசீர் அருண் இயக்கியுள்ள ’முசாஃபிர் கஃபே’ எனும் இணையத் தொடரில் நடிகர் விக்ராந்த் மாஸே நாயகனாக நடித்துள்ளார்.

காதல் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் எழுத்தாளர் திவ்ய பிரகாஷ் துபே எழுதிய முசாஃபீர் கஃபே எனும் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

வேதிகா பிண்டோ மற்றும் மஹிமா மக்வானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் கடந்த ஜூலை 24ல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதன் திரைக்கதை எழுத்தாளர் சரண்யா ராஜகோபால் கூறியிருப்பதாவது:

ஒரு கதைசொல்லியாக, நாம் எழுதிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இடம் கிடைக்க வேண்டுமென விரும்புவோம். நமது வேலையில் இருக்கும் நேர்மைதான் அவர்களிடம் பேசும். சந்தன், சுதா, ப்ரீத்தி கதாபாத்திரங்கள் மீது மக்கள் இவ்வளவு அன்பை அளித்தது நான் நினைத்ததை விட அதீத அழககாக இருக்கிறது.

இந்தக் கதையை நமிபிய நெட்பிளிக்ஸுக்கு நன்றி. முதல் பாகத்தை தங்களதாக்கியவர்களுக்கு இரண்டாம் பாகம் ஒரு காதல் கடிதம் போல இருக்கும் எனக் கூறியுள்ளார்.

summary

Netflix renews romantic drama 'Musafir Cafe' for a second season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments