FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓடிடியில் வெளியானது ராதிகா ஆப்தே, அதிதி ராவ் ஹைதரியின் லஸ்ட் ஸ்டோரிஸ் 3!

பிரபலமான இணையத் தொடர் லஸ்ட் ஸ்டோரிஸின் மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது குறித்து...

27 வினாடிகள் முன்பு
லஸ்ட் ஸ்டோரிஸ் 3 போஸ்டர் - படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ்
பகிர்:

பிரபலமான இணையத் தொடர் லஸ்ட் ஸ்டோரிஸின் மூன்றாவது பாகம் இன்று (செப்.18) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஆங்கில சப்டைட்டல் உடன் வெளியாகியுள்ளது.

தொடக்கத்தில் 2018 ஜூனி 15ல் லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் குறும்படங்களின் தொகுப்பு வெளியானது. இதில் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் இயக்கிய நான்கு படங்களின் தொகுப்பு 120 நிமிஷங்கள் வெளியாகின.

இந்தத் தொடருக்குக் கிடைத்த அற்புதமான வரவேற்பினால் இதன் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு ஜூன் 29ல் வெளியானது. இதில் பால்கி, கொன்கனா சென் சர்மா, அமித் ரவீந்திரநாத் சர்மா, சிஜோய் கோஷ் இயக்கிய படங்கள் 132 நிமிஷங்களுடன் வெளியாகின.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் தமன்னா, மிருணாள் தாக்குர் என நட்சத்திர பட்டாளங்கள் அடித்து முதல் பாகத்தைவிடவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், இதன் மூன்றாம் பாகம் இன்று (செப்.18) நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமாதித்ய மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பட்டர் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கிய படங்களின் தொகுப்பு வெளியாகவிருக்கின்றன.

இந்தத் தொடரில் ராதிகா ஆப்தே, கொங்கோனா சென் சர்மா, அதிதி ராவ் ஹைதாரி, ராதிகா மதன், சனா தம்பி, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, சித்தார்த், அலி ஃபசல் மற்றும் குர்பதே பிர்சாதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Netflix anthology series Lust Stories 3 releases on September 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments