FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு

வீட்டின் பின்புறம் முகம் கழுவிக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மனைவியின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

வீட்டின் பின்புறம் முகம் கழுவிக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மனைவியின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.
சென்னை, வில்லிவாக்கம் ஐசிஎஃப் கிழக்கு காலனியில் வசிப்பவர் கந்தவேல், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர். மனைவி மல்லிகா (51), செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் முகம் கழுவிக் கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் மல்லிகாவின் வாயைப் பொத்தி, அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
ஐசிஎஃப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments