சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருட்டு: இருவர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர்புரம், காந்தி மண்டபம் அருகே போலீஸார் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் சென்ற இருவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். இதில், அவர்கள் இருவரும் பெருங்குடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வே.ராஜேஷ்கிருஷ்ணா (எ) மகேஷ்குமார் (32), அவரது கூட்டாளி சி.அரவிந்த்குமார் (23) எனத் தெரிய வந்தது.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளிடம் செல்லிடப்பேசி, பணப்பைகளைத் திருடி வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 54 செல்லிடப்பேசிகள், கத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.