FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பட்டப் படிப்பு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 6 அரசு சித்தா மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். ஆகிய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் மொத்தம் 1400 இடங்கள்  உள்ளன.
இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர  கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை  தொடங்கியது.
முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 390 இடங்களில், இரவு 7 மணி நிலவரப்படி 70 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படுவதால் அனைத்து இடங்களும் நிரம்பிவிட வாய்ப்புள்ளது எனஅதிகாரிகள் தெரிவித்தனர். 
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments