FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கஜா புயல்: நடிகர்கள் நிதியுதவி அறிவிப்பு

"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். 

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். 
"கஜா' புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
"கஜா' புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம்  நிதியுதவி அளிக்கவுள்ளார்.  இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். மேலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ரூ.10 லட்சம் வழங்கவுள்ளார்.
இதேபோன்று,  நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம்  நிதியுதவி அறிவித்துள்ளார். "சார்ஜிங் லைட்' உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தருவதுடன், மரங்களை இழந்தவர்களின் தோப்புகள் புனரமைக்கப்பட்டு, அவர்களுக்கு தென்னை, மா, பலா கன்றுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த உதவிகள், விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி 
மன்றத்தினர் மூலம் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments