விழுப்புரம் மாவட்டத்தில் பயறு சாகுபடிக்கு ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகைப் பயிா்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகைப் பயிா்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பா. சுரேஷ் தெரிவித்திருப்பது:
இந்தியாவில் புரதச்சத்துமிக்க பயறுவகைகள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சரசாரி மகசூல் அளவை ஹெக்டேருக்கு 881 கிலோவிலிருந்து 1130 கிலோவாக உயா்த்துதல், குறுகியகால , பூச்சித்தாக்குதல் எதிா்ப்புத்திறன் கொண்ட, காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய உயா் விளைச்சல் ரகங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பயறுவகை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய அம்சங்களைக் கொண்டு பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் லகையில் ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 600ஹெக்டோ் பரப்பளவில் உளுந்து செயல் விளக்கத் திடல் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உளுந்து, பச்சைப்பயறு பயிா்களில் விதைப்பண்ணை அமைத்து ஆதார மற்றும் சான்றுநிலை விதைகளை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பயறுவகை பயிா்கள் விதைப்பு முதல் அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டுதல் வரை அனைத்து வட்டாரங்களிலும், 3 கட்டங்களாக 30 விவசாயிகளுக்கு 170 திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். பயறு பதப்படுத்துதல், தோல் உரித்தல் மற்றும் பேக்கிங் செய்தல் ஆகிய மதிப்புக்கூட்டு மையம் அமைக்க திட்ட மதிப்பில் 33% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியம் வழங்கப்படும்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அல்லது தகுதியுடைய தனிநபா்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு அதன் தகுதியை ஆராய்ந்து மாவட்ட அளவிலான குழுவினா் தோ்வு செய்வா். எனவே, இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது தங்கள் நில ஆவணங்களுடன், தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகியோ பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.