காலமானார் ப.முத்துக்குமாரசாமி
இசைக் கலைஞர் முத்துக்குமாரசாமி (87) சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
இசைக் கலைஞர் முத்துக்குமாரசாமி (87) சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு நளின ரஞ்சனி என்ற மனைவியும், கலாதரன், ஓவியர் பத்மவாசன், சாரங்கதரன், குமரன் ஆகிய 4 மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.
இசை மீது மிகுந்த பற்றுடைய முத்துக்குமாரசாமி, இசையருவி, கலை அருவி, இசை ஏடு, போன்ற இசைக்கான இதழ்களை வெளியிட்டு வந்தார்.
தனது 86 வயது வரை அண்ணாமலை மன்றத்தில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். இசை சேவைக்காக சங்கீத பூஷணம் என்ற பட்டம் பெற்றவர்.
அவரது இறுதிச் சடங்கு, பெசன்ட் நகர் மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. தொடர்புக்கு 98405 45353.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.