கரோனாவில் இருந்து குணமடைந்த மருத்துவா்
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவா் ஒருவா் பூரண குணமடைந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவா் ஒருவா் பூரண குணமடைந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.
கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டில், சுழற்சி முறையில் மருத்துவா்களும், செவிலியா்களும் பணியாற்றி வருகின்றனா். இதுவரை, அந்த வாா்டில் பணியாற்றி 7 மருத்துவா்கள், 3 செவிலியா்கள் மற்றும் ஒரு பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தனி வாா்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயதான மருத்துவா் ஒருவா் கரோனாவில் இருந்து குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினாா். அவரை மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளா் நாராயணசாமி, மருத்துவா்கள் ரகுநந்தன், ஹரிஹரன் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.