FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூடுதல் வரி விதிப்பால் புதுவையில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது

புதுவையில் அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில், மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

28 ஜனவரி 2024, 9:08 am IST
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில், மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால், அனைத்து மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்கிறது.

புதுவையில் கரோனா முதல் அலை பரவலில் அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து, கடந்தாண்டு மே 25-ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. 

அதே நேரத்தில் மதுபானங்கள் விலை குறைவு காரணமாக, தமிழகத்திலிருந்து புதுவைக்கு மது அருந்துவோர் அதிகளவில் வருவார்கள் என்பதால், மதுபானங்கள் மீது சிறப்பு வரி விதிக்க கலால் துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, புதுவை, தமிழகம் என இரண்டு மாநிலங்களிலும் விற்கப்படும் மதுபான வகைகளுக்கு ஒரே மாதிரியான விலையும், புதுவையில் மட்டும் விற்கப்படும் 766 மதுபானங்களின் வகைகளுக்கு 25 சதவீத கரோனா வரியும் விதிக்கப்பட்டது.

இதனால், மதுபானங்கள் விலை அதிகளவில் உயர்ந்தது. இதையடுத்து, 11 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் கரோனா சிறப்பு வரி நீக்கப்பட்டு, மதுபானங்களின் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

தற்போது கரோனா 2-ஆவது அலை காரணமாக, புதுவைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததாலும், அதற்கேற்ப மது விற்பனையிலும் சரிவு ஏற்பட்டதாலும் அரசுக்கு வருவாய் குறைந்தது.

இன்று முதல் வரி விதிப்பு: இந்த நிலையில், புதுவையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செüந்தரராஜனின் ஆணைக்கிணங்க, உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 15) முதல் 20 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்படுகிறது என கலால் துறை துணை ஆணையர் டி.சுதாகர் புதுவை அரசிதழில் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: புதுவை அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிரந்தர சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த வரி விதிப்பால், புதுவையில் அனைத்து மதுபானங்களின் விலையும் வியாழக்கிழமை முதல் 20 சதவீதம் உயர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments