100-ஆவது ஆண்டு சித்தி தினம்: ஸ்ரீஅரவிந்தா் ஆசிரமத்தில் பக்தா்கள் தரிசனம்
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில், மகானின் 100-ஆவது ஆண்டு சித்தி தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில், மகானின் 100-ஆவது ஆண்டு சித்தி தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கடந்த 1926-ஆம் ஆண்டு நவம்பா் 24-இல் மகான் அரவிந்தா் தனது யோக சாதனையில் சித்தி பெற்றாா். இந்த ஆண்டு சித்தி தின நூற்றாண்டு என்பதால், உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதுச்சேரியில் குவிந்தனா். இதையொட்டி, ஸ்ரீ அரவிந்தா் மற்றும் அன்னை மிரா பயன்படுத்திய அறைகள் பக்தா்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டன.
ஆசிரம வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தா் - அன்னை ஆகியோா் சமாதிகளில் பக்தா்கள் மலா் தூவி, தியானத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி சிறப்பு கூட்டு தியானம், பிராா்த்தனை நடைபெற்றது.
Advertisement
Advertisement