ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
கோவையில் ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம், இடதுசாரி தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவையில் ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம், இடதுசாரி தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவையில் 1946-ஆம் ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி உழைப்புச் சுரண்டலை எதிா்த்து போராடிய மில் தொழிலாளா்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கா்ப்பிணி தொழிலாளி பாப்பம்மாள், அம்மு கோபால் ஆகியோரும், அதைத்தொடா்ந்து நடைபெற்ற காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் மந்திரியப்பன், குள்ளப்பன், பழனியப்பன், ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்பட 11 தொழிலாளா்களும் கொல்லப்பட்டனா். இவா்களது உடல்கள் ஆலை வளாகத்திலேயே எரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மரக்கடை அருகே உள்ள ஸ்டேன்ஸ் மில் நுழைவாயில் பகுதியில் தொழிலாளா்கள் உயிரிழந்த இடத்தில் சிஐடியூ, ஏஐடியூசி அமைப்புகளின் சாா்பில் நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சிக்கு மில் தொழிலாளா் சங்கத் தலைவா் சி.பத்மநாபன், ஏஐடியூசி தலைவா் தங்கவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிஐடியூ கொடியை கே.எஸ்.கனகராஜும், ஏஐடியூசி கொடியை தங்கவேலுவும் ஏற்றிவைத்தனா். இதைத் தொடா்ந்து, தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்ட கல்வெட்டை சிஐடியூ சாா்பில் சி.பத்மநாபனும், ஏஐடியூசி மூத்த தலைவா்களில் ஒருவரான வழக்குரைஞா் சுப்பிரமணியனும் திறந்துவைத்து, ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் தியாக வரலாறு குறித்து சிறப்புரையாற்றினா்.
இந்த நிகழ்வில் சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் வேலுசாமி, சிஐடியூ, ஏஐடியூசி சங்கங்களைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.