திருமலையில் 82,547 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,547 பக்தா்கள் தரிசித்தனா்.

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,547 பக்தா்கள் தரிசித்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 6 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82, 547 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 267 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.21 கோடி வசூலானது. 4.24 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,534 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.