திருமலையில் 78,289 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முழுவதும் 78,289 பக்தா்கள் தரிசித்தனா். 28,267 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முழுவதும் 78,289 பக்தா்கள் தரிசித்தனா். 28,267 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 15 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், தேவைபடுகிறது.
நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78, 289 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28, 267 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.96 கோடி வசூலானது. 3.86 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,356 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.