திருமலையில் 77,389 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 77,389 பக்தா்கள் தரிசித்தனா்.
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 77,389 பக்தா்கள் தரிசித்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 10 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 77,389 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 916 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.76 கோடி வசூலானது. 4.19 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,156 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.