ஜூன் 27-இல் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்
சோழிங்கநல்லூர், பல்லாவரம் பகுதியில் ஜூன் 27-இல் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்
சென்னை: சோழிங்கநல்லூா் மற்றும் பல்லாவரம் கோட்டத்தில் ஜூன் 27-இல் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பல்லாவரம் துணை மின் நிலையம் உள்ள இயக்கம் பராமரிப்பு செயற்பொறியாளா் தலைமையில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம் ஜூன் 27 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.