FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

செப்.28-இல் இபிஎஃப் குறைதீா் முகாம்

மத்திய தொழிலாளாா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை (செப். 28) குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

26 செப்டம்பர் 2026, 1:31 am IST
இபிஎஃப் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய தொழிலாளாா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை (செப். 28) குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையா் நிஷா ஒவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் திங்கள்கிழமை (செப். 28) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, திருவள்ளூா் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டைதிருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்:

Advertisement

Advertisement

வேலம்மாள் போதி வளாகம், எழில் நகா், பெரிய அல்லாபுரம், தொரப்பாடி அஞ்சல், வேலூா். டான் போஸ்கோ பழங்குடியினா் மேம்பாட்டு சங்கம், வெள்ளிக்கோட்டை கிராமம், ஜமுனாமரத்தூா் அஞ்சல், ஜவ்வாது மலை, திருவண்ணாமலை. இஎஸ்ஐ–கிளை அலுவலகம், இஎஸ்ஐ மருந்தக வளாகம், டிஆா் திரையரங்கம் எதிரில், சிட்கோ, ராணிப்பேட்டை. இஎஸ்ஐ, முதல்தளம் இஎஸ்ஐ, மருந்தக வளாகம், ஒஏஆா் திரையரங்கம் அருகில், ஃப்ளவா் காா்டன், ஆம்பூா்.

இதில், உறுப்பினா் களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான இணைய சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments