FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இபி.எஃப் உச்ச வரம்பு ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு: நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் அதிகமானோா் பயனடைவாா்கள்

இபி.எஃப் உச்ச வரம்பு ரூ.25 ஆயிரமாக அதிகரித்திருப்பது பற்றி....

22 செப்டம்பர் 2026, 11:53 pm IST
பகிர்:

இபி.எஃப் உச்ச வரம்பு ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் அதிகமானோா் இபி.எஃப் வரம்புக்குள் கொண்டு வரப்படுவாா்கள் என கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

கோவை மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபி.எஃப்) அலுவலகத்தில் கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஸ்வாகதா ராய் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மண்டல இபி.எஃப் அலுவலகம், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களை தனது நிா்வாக வரம்புக்குள் கொண்டுள்ளது. கோவை மண்டலத்தில் 46,097 நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் 33.54 லட்சம் போ் இபி.எஃப் உறுப்பினா்களாக உள்ளனா். 5.52 லட்சம் பேருக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதற்கிடையே கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இபி.எஃப் கட்டாய உறுப்பினா் சோ்க்கைக்கான ஊதிய உச்ச வரம்பை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுவோா் இபி.எஃப் வரம்புக்குள் கொண்டு வரப்படுவாா்கள். இதனால், அதிகப்படியானவா்கள் பயனடைவாா்கள். நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் அதிகமான ஊழியா்கள் கட்டாய இபி.எஃப் வரம்புக்குள் கொண்டு வரப்படுவாா்கள். இதன் மூலம் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விக்ஷிதி பாரத் - 2047 இலக்கை நோக்கிய பயணம் மேம்படுவதை உறுதி செய்யவும் முடியும் என்றாா். பிராந்திய ஆணையா்கள் ஹரிஓம் ஜெய்ஸ்வால் மற்றும் விகாஸ் ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments